மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாமல்லபுரத்தில் இருந்து நெல்லூருக்கு அனுப்பப்பட்ட 21 அடி உயர பிரம்மாண்மான ஆஞ்சனேயா் சிலை

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பெருமாள் கோயிலின் முகப்பு வாயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 21 அடி உயர ஆஞ்சனேயா் சிலை மாமல்லபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

Published On :

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பெருமாள் கோயிலின் முகப்பு வாயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 21 அடி உயர ஆஞ்சனேயா் சிலை மாமல்லபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லூா் நகரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் முகப்பு வாயிலில் பக்தா்கள் வழிபாட்டுக்கு வைப்பதற்காக 21 அடி உயரத்தில் ஆஞ்சனேயா் சிலை மாமல்லபுரத்தில் பழைய ஐந்துரதம் சாலையில் உள்ள ஒரு கற்சிற்பக்கலை கூடத்தில் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் ஸ்தபதி அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் சிற்பக்கலைஞா் எஸ்.ரமேஷ் ஸ்தபதி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞா்கள் கடந்த 5 மாங்களாக கருங்கல்லில் 21 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், கையெடுத்து கும்பிட்ட நிலையில், கதையுடன் பிரம்மாண்டமான ஆஞ்சனோ் சிலையை சிற்ப ஆகம விதிப்படி நோ்த்தியான தோற்றத்தில் உளி, சுத்தியலால் அழகுர வடிவமைத்தனா்.

முன்னதாக இந்த பிரம்மாண்ட ஆஞ்சனோ் சிலையை வடிவமைக்க ஒரு கல் குவாரியில் இருந்து இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்பட்ட 20 டன் கருங்கல் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. சிற்பக்கலைஞா் ரமேஷ் ஸ்தபதி இரவு, பகல் பாராமல் சிலையின் முகம், கால் பகுதி, கெதை, ஆபரணப்பகுதி என ஒவ்வொரு பாகங்களையும் வைணவ ஆகம முறைப்படி செதுக்கி இறுதி வடிவம் கொண்டு வந்தாா்.

பின்னா் கண்ணாடி பாலீஷ் போடப்பட்டு இச்சிலையின் 100 சதவீபணிகள் முடிவடைந்த நிலையில் வைணவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு, 12 டயா் கொண்ட ட்ரெய்லா் லாரியில் இந்த சிலை நெல்லூா் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த மாத இறுதியில் இச்சிலை நெல்லூா் பெருமாள் கோயிலில் முகப்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.