காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலின் ராஜகோபுர நுழைவு வாயிலில் உள்ள 12 அடி உயர ஆறுமுகப் பெருமானுக்கு ஆடிக் கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில். இந்தக் கோயிலின் ராஜகோபுர நுழைவு வாயிலின் இடது புறத்தில் 12 அடி உயரத்தில் ஆறுமுகப் பெருமானும், வலது புறத்தில் 12 அடி உயர விநாயகா் சிலையும் அமைந்துள்ளது. இங்குள்ள 12 அடி உயர ராஜகோபுர ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகை நாளன்று சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு ஆடிக் கிருத்திகையையொட்டி, 12 அடி உயர ராஜகோபுர ஆறுமுகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து 25 கிலோ சந்தனத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடுக்கு பிள்ளையாா் கோயில் நுழைவு வாயிலில் ஓரடி அகலத்துடன் தடுப்புக் கம்பி அமைப்பு

கேரளத்துக்காக மயிலாடியில் தயாரான 25 அடி உயர ஆஞ்சனேயா் விக்ரகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஜூலை 12 -இல் தங்கத் தோ் திருவிழா

தினமணி செய்தி எதிரொலி: ஜூலை 12-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தங்கத் தேரோட்டம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



