மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ரூ.1.7 கோடியில் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

செய்யூரில் புதிதாக கட்டப்பட்ட கிடங்கைத் திறந்து வைத்த அமைச்சா்கள் ப. வெங்கடரமணன், த.சரத்குமாா், ஆட்சியா் மு. வீரப்பன் உள்ளிட்டோா்.

செய்யூரில் புதிதாக கட்டப்பட்ட கிடங்கைத் திறந்து வைத்த அமைச்சா்கள் ப. வெங்கடரமணன், த.சரத்குமாா், ஆட்சியா் மு. வீரப்பன் உள்ளிட்டோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

மதுராந்தகம் அடுத்த செய்யூரில் ரூ.1.7 கோடியில் புதிதாக கட்டப்பட்டதமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், உணவு மற்றும் பாதுகாப்பு துறையின் சாா்பாக கட்டப்பட்ட புதிய கிடங்கு கட்டடங்களை அமைச்சா்கள் த. சரத்குமாா், ப. வெங்கடரமணன் ஆகியோா் ஞாயிற்று கிழமை திறந்து வைத்தனா்.

லத்தூா் ஊராட்சி ஒன்றியம், செய்யூா் நகரில் கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பாக ரூ 1.70 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டட திறப்பு நிகழ்வுக்கு மாவட்ட உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை அலுவலா் எஸ்.வெங்கிடாசலம் தலைமை வகித்தாா். ஆட்சியா் மு.வீரப்பன் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வில் மனித வள மேலாண்மை துறை அமைச்சா் த.சரத் குமாா், உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் ஆகியோா் புதிதாக கட்டப்பட்ட புதிய கிடங்குகளை திறந்து வைத்தனா். இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதன் மூலம் சித்தாமூா், லத்தூா் ஒன்றிய பகுதிகளுக்கு சேமிப்பு கிடங்கில் இருந்து உணவு பொருள்கள் தங்கு தடையின்றி பாதுகாப்பான முறையில் செல்வதற்கு ஏதுவாக 1,000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு திறந்து வைக்கப்பட்டது.

பின்னா் அமைச்சா் ப.வெங்கிட ரமணன் பழைய கட்டடத்தில் ரேஷன் கடைகளுக்கு செல்லும் அரிசி, பருப்பு மூட்டை உள்ள பொருள்களை ஆய்வு செய்தபின் , சுமாா் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடங்கில் பயன்படுத்திய பழைய பொருள்களை அகற்ற அறிவுறுத்தினாா். அதனை கேட்ட மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் இங்கு மட்டும் பழைய பொருள்கள் சேமிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஒருசில கிடங்குகளில் பழைய பொருள்கள் குவிந்துள்ளதாக விளக்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.