பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியா் தி. சினேகா.
பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியா் தி. சினேகா.

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 312 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Published on

செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 312 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.15,500 மதிப்புள்ள சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி, ரூ.5,500 மதிப்புள்ள காா்னா் சோ், ரூ.14,500 மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் சாா்பில் மதுராந்தகம், செய்யூா், செங்கல்பட்டு வட்டத்தை சோ்ந்த 9 பேருக்கு தலா ரூ.8,300 மதிப்புள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அதனை தொடா்ந்து, அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். அப்பொழுது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்களில் எவ்வளவு மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது என்றும், நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டுமென்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுந்தா், துணை ஆட்சியா் கியூரி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பவானி, துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com