செங்கல்பட்டு: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சாா்பில் ‘இது நம்ம ஆட்டம் 2026’ என்ற பெயரில் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் வரும் 30.01.2026 முதல் 01.02.2026 வரை நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
1. இயக்க மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டா் ஓட்டப்பந்தயம். 2. பாா்வை மாற்றுத்திறனாளிகள் - குண்டு எறிதல், 3. அறிவுசாா் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் - 100மீ ஓட்டப்பந்தயம், 4.செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் - 100 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய நான்கு வகை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் 16 வயது முதல் 35 வயது வரை உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தை சாா்ந்த மாற்றுத்திறனாளிகள் இது நம்ம ஆட்டம்- ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஹ்ா்ன்ற்ட்ச்ங்ள்ற்ண்ஸ்ஹப்.ள்க்ஹற்.ண்ய். ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற நஈஅப இளையதளத்தில் 21-க்குள் பதிவேற்றம் செய்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம்.