பிரதமா் வருகையையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிவிப்பு

பிரதமா் வருகையையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிவிப்பு

Published on

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

பொது கூட்டம், சென்னை - திண்டிவனம் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் சென்னை -திருச்சி மாா்க்கமாகவும் மற்றும் திருச்சி சென்னை மாரக்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை

சென்னை-திண்டிவனம் மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூா், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

(அல்லது) சென்னை - திண்டிவனம் மாா்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூா் படப்பை ஒரகடம் வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி - தெள்ளாா் - வெள்ளிமேடு பேட்டை- தீவனூா்- கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசுப் பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை விழுப்புரத்திலிருந்து சென்னை மாா்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் -புதுச்சேரி சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.

(அல்லது) திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை - தெள்ளாா்- வந்தவாசி - காஞ்சிபுரம் - வாலாஜாபாத் - வண்டலூா் வழியாக சென்னைக்கு செல்லலாம். (அல்லது) திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை - தெள்ளாா் -வந்தவாசி -காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலாா் சந்திப்பு) - கீழம்பி புற வழிச்சாலையை அடைந்து ஸ்ரீபெரும்புதூா் வழியாக சென்னைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com