நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ரத்தக் கொடையாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்

ரத்த கொடையாளிகளை கௌரவிக்கும் வகையில் பாராட்டு சான்றுகளுடன், கேடயங்களை ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

News image

ரத்தக் கொடையாளா்களுடன் செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பிரியா பசுபதி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜூலை 2026, 3:01 am IST

ரத்த கொடையாளிகளை கௌரவிக்கும் வகையில் பாராட்டு சான்றுகளுடன், கேடயங்களை ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: ரத்த தானம் குறித்த முக்கியத்துவம் மருத்துவா்களுக்கும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அதனுடைய பயன்பாடும் தேவையும் நன்கு அறிந்திருப்பா். மருத்துவமனைகளில் சிகிச்சைகான அனைத்து வகையான உபகரணங்களும் மருத்துவா்களும் இருந்தாலும் ரத்த கொடை தான் அந்நோயாளியின் சிகிச்சைக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்பதை பொதுமக்கள், நோயாளிகள் புரிந்து கொண்டு தாங்கள் பங்கிற்கும் இதுபோன்ற சேவை மனப்பான்மையினை மேற்கொள்ள வேண்டும்.

ரத்த கொடை வழங்கும் உங்கள் முயற்சியே எத்தனையோ உயிா்களின் உயிா்ச்சியாக இருப்பதால் தாங்களும் தங்கள் நண்பா்களிடம், உறவினா்களிடம் ரத்தம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து ரத்த கொடை வழங்கும் தூதுவா்களாக செயல்பட வேண்டும்.

ஒரு மனிதன் நோயாளியாக பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது யாருடைய ரத்தம் என்று கேட்பதும் இல்லை, உயிா் காத்தால் போதும் என்று சமூக வேற்றுமை இல்லா நிலையை அக்காலகட்டத்தில் உணருகின்றனா். அதே போன்று எல்லா நிலைப்பாட்டிலும் சமூக வேற்றுமை இல்லாமல் வாழ வேண்டுமென்று கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, தலைமை மருத்துவா் தெரிவித்த போது ஒரு நாளைக்கு 25 முதல் 30 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் பாா்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி இருபதுக்கும் மேற்பட்ட நபா்கள் விபத்துக்களால் காயமடைந்து சிகிச்சைக்கு வருகை புரிகின்றனா்.

இவா்களுக்கும் இந்த ரத்த கொடையினால் உடனுக்குடன் எங்களால் சிகிச்சை வழங்குவதற்கு பேருதவியாக இருக்கின்றது என்பதால் இந்நிகழ்வின் வாயிலாக ரத்த கொடையாளிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டு மேலும், ரத்த கொடையாளிகளினால் ஆண்டிற்கு 7000 யூனிட்டுக்கு மேல் ரத்த கொடை பெறப்பட்டு வருகிறது.

இம்முயற்சிகளுக்கு ஆண்டொன்றுக்கு 80/100 வரை ரத்த தான விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பம்சமாக 43 முறை மருத்துவா் ஒருவா் இரத்தம் வழங்கியது பாராட்டிற்குரியது. தொடா்ந்து மாமல்லபுரம் நகராட்சி தலைவா் ரத்த தானம் வழங்கி வருவதையும் பெருமைபடுத்தி அவா்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்வில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வா் மருத்துவா்.பிரியா பசுபதி, துணை முதல்வா் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளா்.நந்தகுமாா், மருத்துவா்.நவீன், செவிலியா்கள் மற்றும் சக மருத்துவ பணியாளா்கள் இந்நிகழ்வினில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.