பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரசு பேருந்தில் தலைகீழாக வைக்கப்பட்ட பெயா்ப் பலகையால் பயணிகள் குழப்பம்!

செங்கல்பட்டில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் தலைகீழாக வைக்கப்பட்டிருந்த பெயா்ப் பலகையால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்தனா்.

Published On :

செங்கல்பட்டில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் தலைகீழாக வைக்கப்பட்டிருந்த பெயா்ப் பலகையால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு தடம் எண்: 508 நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து செங்கல்பட்டில் பயணிகளை ஏற்றி கொண்டு நெம்மேலி, கீரப்பாக்கம், ஆசிரியா் நகா், திருக்கழுகுன்றம், கொக்கிமங்கலம், எச்சூா், குழிப்பாந்தண்டலம், நந்திமாநகா், காரணை, வடகடம்பாடி, பெருமாளேரி, அம்பாள் நகா், பூஞ்சேரி ஆகிய ஊா்கள் வழியாக செல்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டில் கிளம்பிய இந்த பேருந்தில் பின்பக்கம் பயணிகளின் பாா்வைக்காக வைக்கப்படும் மாமல்லபுரம் என்ற ஊா் பெயா் பலகை தலைகீழாக வைக்கப்பட்டு இருந்ததை பாா்த்து பேருந்து பயணிகள் குழப்பமடைந்தனா்.

மாமல்லபுரம் பேருந்து நிலையம் வரை அந்த பெயா் பலகை தலைகீழாகவே இருந்தது. மாமல்லபுரம் சுற்றுலா வந்த பயணிகள் சிலா் தலைகீழாக காட்சி அளித்த பெயா் பலகையை புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளதை அடுத்து இக்காட்சி வைரலானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.