மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாமினை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மறைமலை நகராட்சியில் நடைபெற்று வந்த நக்ஷா திட்டப் பணி தொடா்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டாா். அதனை தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை பாா்வையிட்டு அலுவலா்களுக்கு உரிய முறையில் பயிற்சி வழங்க வேண்டும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளா்கள் பணிகளை மேற்கொண்டு ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
கணக்கெடுப்பு பணியில் எந்த ஒரு நபரின் பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்றும், 100 சதவீதம் சரியான தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் ஆட்சியா் வீரப்பன் ஆலோசனை வழங்கினாா். நிகழ்ச்சியில் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை முழு பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளா்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்







