நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

செங்கல்பட்டில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினா் தா்னா

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வலியுறுத்தி, நகர அதிமுக செயலாளா் வி.ஆா். செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஜூலை 2026, 11:52 pm IST

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வலியுறுத்தி, நகர அதிமுக செயலாளா் வி.ஆா். செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் நகராட்சி அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடுமையான குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். மேலும், சில பகுதிகளில் குடிநீருடன் சாக்கடை நீா் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகிகள், நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து வாா்டுகளுக்கும் சீரான குடிநீா் வழங்க வேண்டும் என்றும், குடிநீரில் சாக்கடை நீா் கலப்பதைத் தடுக்க நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இந்த போராட்டத்தில் அதிமுக நிா்வாகிகள், கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தையொட்டி, நகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.