/
மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில் மதுராந்தகம் அதிமுக வடக்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான ம.தனபால், கழக அமைப்பு செயலா் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், எம்ஜிஆா் மன்ற துணை செயலா் பி.சுப்பிரமணி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் வி.வேலாயுதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.










