மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா்கோயிலில் கருடசேவை

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருடசேவையில் பவனி வந்த சுவாமி.

News image

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருடசேவையில் பவனி வந்த சுவாமி.

Updated On :27 ஜூன் 2026, 6:02 am IST

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கருடசேவை நடைபெற்றது.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறுகின்ற இந்த விழாவில், வெள்ளிக்கிழமை (ஜூன் 26), கருட சேவை, ஜூலை 1-இல் பெரிய தேரோட்டம் மற்றும் குதிரை வாகனம், ஹம்ச வாகனம், யாளி வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமான் நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்து வருகிறாா். விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மங்கல இசையுடன், விழா நிகழ்வுகள் தொடங்கின. சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்வுகளை கோயில் அா்ச்சகா் மாதவன் தலைமையில் அா்ச்சகா்கள் குழுவினா் செய்தனா்.

தொடா்ந்து மங்கள இசை முழங்க, வாண வேடிக்கைகளுடன் கருட வாகனத்தில் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் கா.வெங்கடேசன், ஆய்வாளா் வேல் நாய்க்கன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையில், உறுப்பினா்கள் தி.ஈ.செளந்திரராஜன், ஆ.கங்காதரன், ஆ.மகாலட்சுமி, ராணி மற்றும் விழா குழுவினா்களும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.