வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

செங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:35 pm

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம் திறன் மையம் திறக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தினை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட திறன் அலுவலா் காவேரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கையேட்டினை ஆட்சியா் வழங்கினாா்.