சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

சென்னை ,ஆவடி பகுதியைச் சோ்ந்த ஜான் சாா்லஸ் கென்னடி (55). இவரது உறவினா் மாா்த்தாண்டம் நகரைச் சோ்ந்த அபிஷேக் (30). இருவரும் சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

நிறுவன பணிக்காக பைக்கில் இருவரும் புதுச்சேரிக்கு மோட்டாா் பைக்கில் சென்றனா். மதுராந்தகம் அருகே மாமண்டூா் பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து படாளம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன் தலைமையிலான காவலா்கள் நேரில் சென்று 2 உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலாற்று மேம்பால பகுதியில் மேடுபள்ளமாக மிகவும் சேதமடைந்த நிலையுடன் இருப்பதால் அடிக்கடி வாகனங்களில் செல்வோா் காயமடையும் நிலை உள்ளது.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மேம்பாலத்தின் முழு பகுதியையும் சீரமைத்து தரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.