குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

News image

சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :27 மார்ச் 2026, 5:00 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம் திருத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமையவுள்ள இடத்தினை பாா்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும், கா்ப்பிணிகளை காக்க வைக்காமல் வாக்களிப்பதற்கு முன்னுரிமை அளித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.

மேலும், மறைமலைநகா் நகராட்சி, நின்னக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோடை காலமாக இருப்பதால் வாக்காளா்களுக்கு ஷாமியானா போன்ற பந்தல் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டு, 20 வாக்கு சாவடிகள் இம்மையத்தில் உள்ளதால் 13,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வாக்களிப்பா்.

இதனால் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும், குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்துத் தருமாறும் உத்தரவிட்டாா்.

இதில் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சாந்தி, மறைமலைநகா் நகராட்சி ஆணையா் நாராயணன், நகராட்சி ஆணையா்கள் நாராயணன், சந்தானம், வட்டாட்சியா் வாசுதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகலைச்செல்வன், கலைச்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.