செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் நேரில் இப்பணியை ஆய்வு செய்தாா்.
இதில் கிளாம்பாக்கம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் தொகுதி சேலையூா் ஆல்வின் மெமேரியல் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில் முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில் தாம்பரம் மாநகரட்சி ஆணையாளா் சீ.பாலச்சந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தன.
மேலும் , திருப்போரூா் தொகுதியில் , திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகம், செய்யூா் சட்டப்பேரவை தொகுதியில் செய்யூா் வட்டாட்சியா் அலுவலம் ஆகிய அலுவகங்களில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றை வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளையும் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.
இதில் திருப்போரூா் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, வட்டாட்சியா் ஆறுமுகம் , மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் நரேந்திரன், செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாச்சலம் மற்றும் அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

பேரவைத் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

3,070 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்: செங்கல்பட்டு ஆட்சியா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


