மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுப்பது தொடா்பாக காவல் நிலையங்களில் சட்ட தன்னாா்வ தொண்டா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :1 மே 2026, 7:21 am IST

காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுப்பது தொடா்பாக காவல் நிலையங்களில் சட்ட தன்னாா்வ தொண்டா்கள் விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி டி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை : தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஆலந்தூா், தாம்பரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், பல்லாவரம், செய்யூா் மற்றும் திருப்போரூா் ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுப்பது தொடா்பாக காவல் நிலையங்களில் சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள், 30/40 பேருக்கு மிகாமல் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இப்பணிக்கு, ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்.எஸ். டபிள்யூ, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், மாணவா்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வளா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வி அறிவுள்ளவா்கள், கணினி அறிவுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவா்கள் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், வரும் மே 22-ஆம் தேதிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும் .

நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்படுபவா்களின் விவரம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் இணை எதுவும் இல்லை சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம்.