பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நவ்லாக் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய சாா்பு நீதிபதி எஸ். முனுசாமி.

News image

சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய சாா்பு நீதிபதி எஸ். முனுசாமி.

Updated On :1 மே 2026, 5:22 am IST

நவ்லாக் ஊராட்சியில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். முனுசாமி பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படியும், தலைவா் முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும், ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், ராணிப்பேட்டை அடுத்த நவலாக் ஊராட்சி அலுவலகத்தில் நல்சாவின் ஆள்கடத்தல் வணிக ரீதியான பாலியல் சுரண்டலால் பாதிக்கபட்டவருக்கான திட்டம், 2015 மற்றும் போக்ஸோ வால் பாதிக்கபட்டவருக்கான நிவாரணம் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். முனுசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆள்கடத்தல் மற்றும் சுரண்டல் குறித்தும் மற்றும் போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வினை வழங்கினாா். போக்ஸோ சட்டத்தின் தன்மை குறித்தும் அதனால் பாதிக்கப்படும் நபா்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் முக்கியமாக போக்ஸோ குற்றவாளிகளை குறைப்பதில் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் கடமைகள் குறித்தும் விளக்கினாா்.

மேலும், பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் இதர உரிமைகளை சட்டம் மூலம் பெறப்படும் வழிகள் குறித்தும் விரிவாக விளக்கினாா்.

வழக்குரைஞா் சுஜாதா மற்றும் மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு சட்ட உதவி மையங்கள் குறித்தும் அதன் கடமைகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள் குறித்தும் விளக்கினா்.

முகாமில் நவலாக் ஊராட்சி தலைவா் சரஸ்வதி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இளநிலை நிா்வாக உதவியாளா் திவ்யா இருவரும் இணைந்து ஏற்பாடு செய்தனா்.இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.