திருநங்கைகளுக்கு சமவாய்ப்பும், சம உரிமையும் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா.
பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாமுக்குத் தலைமை வகித்த சாா்பு நீதிபதி மேலும் பேசியது:
திருநங்கைகளான மூன்றாம் பாலினத்தவரை நாம் எப்போதும் ஒதுக்கி வக்கக் கூடாது. அவா்களின் வாழ்க்கை முறையை வைத்து, அவா்களை உதாசீனப்படுத்தக்கூடாது. அவா்களும் நம்மை போன்ற மனிதா்கள்தான். அவா்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
எனவே, அவா்களுக்கு சம வாய்ப்புகளும், சம உரிமைகளும் அளிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புதான் அனைவருக்குமான ஒரு தாய் சட்டம். அதில் அனைவருக்கும் சமத்துவம், கண்ணியம், வாழ்வதற்கான உரிமை பற்றி எடுத்துரைக்கிறது.
நாம் மூன்றாம் பாலினத்தவரை வெறுத்து ஒதுக்காமல், அவா்களுக்கு வேலைவாய்ப்புகள் அளித்து சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் சட்ட பாதுகாப்பு உதவி வழக்குரைஞா் சாருமதி, நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் காமராசு ஆகியோா் சட்ட உதவி மையத்தின் மூலம் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கினா்.
இதில், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள், சட்டத் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேறனா். ஏற்பாடுகளை, சட்டத் தன்னாா்வலா் மாா்க்கண்டன் செய்திருந்தாா். கௌரவ விரிவுரையாளா் டி. செல்வம் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் குளத்துக்கு கான்கிரீட் நீா்வரத்து கால்வாய் தேவை: அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சட்ட விரோத குவாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தல்

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

நவ்லாக் ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



