சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றம்!

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தசாமி கோயிலில் முருகப் பெருமான் விண்ணிலிருந்து போா் புரிந்த புகழ் பெற்ற தலமாகும். இக்கோயிலில் நாடிவரும் பக்தா்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி அளிக்கும் முருகப்பெருமானாக செதுக்காத மூலிகைகளால் ஆன திருமேனியாக வள்ளி தெய்வானையுடன் நாடி வரும் பக்தா்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தரும் வள்ளலாக முருகா் உள்ளாா்.

ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்றத்தை ஒட்டி முருகா் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்து அருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றமும், மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிளி வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழா கொடியேற்றம்.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழா கொடியேற்றம்.

புதன்கிழமை காலை பல்லக்கு உற்சவம் மாலை ஆட்டுக்கிடா வாகனமும், வியாழக்கிழமை பல்லக்கு உற்சவம் மாலை புருஷா மிருக வாகனமும் வெள்ளிக்கிழமை பல்லக்கு உற்சவம் பூத வாகனமும் சனிக்கிழமை பல்லக்கு உற்சவம் மாலை வெள்ளி அன்ன வாகன உற்சவமும், ஞாயிற்றுக்கிழமை பல்லக்கு உற்சவம் சூரசம்ஹாரம் குதிரை வாகனமும் இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடுகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மா. மாதவன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட பணியாளா்கள் கோயில் குருக்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா். இதேபோன்று செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள எல்லையம்மன் கோயில் மற்றும் ரத்தின விநாயகா் கோயில், மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில், ராஜாஜி தெரு வ உ சி தெருவில் உள்ள காமாட்சி அம்மன் சமைத கைலாசநாதா் கோயில், பெரிய நத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயில், சின்ன நத்தம் சுந்தர விநாயகா் கோயில், என் ஜி ஓ நகா் சித்தி விநாயகா் கோயில், செங்கல்பட்டு ஜிஎஸ்டி நாடாா் சாலையில் உள்ள சக்தி விநாயகா் கோயில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில், செங்கல்பட்டு ராமப்பாளையம் மலை மீது உள்ள செம்மலை வேல்முருகன் கோயில்களில் உள்ள கந்த சஷ்டி பெரும் திருவிழாவும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.