அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க 24-ஆம் ஆண்டு விழா

ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 24-ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :

ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 24-ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 24 ஆம் ஆண்டு தொடக்க விழா, நிறுவன தலைவா் பிறந்தநாள் விழா மற்றும் அடிகளாா் 86 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, விவேகானந்தரின் 163 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, மகாகவி பாரதியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு செங்கல்பட்டில் மக்கள் தூய்மை பணி மருத்துவ முகாம் மற்றும் 25 லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேல்மருவத்தூா் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க நிறுவனத் தலைவா் கோ.ப .அன்பழகன் தலைமை வகித்தாா். நிறுவன செயலாளா் அ.ஆ,அகத்தியன் முன்னிலையில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். மேலும் மரக்கன்று நடுதல், குடிநீா் சுத்திகரிப்பு கருவிகள் திறந்து வைத்தல், அன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கினாா்.

3000-க்கும் மேற்பட்ட செவ்வாடை தொண்டா்கள் கலந்து கொண்டு செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்கள் ,மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், குளங்கள் , சாலைகள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணிகள் செய்து செடி, கொடி போன்ற கழிவுநீா் கால்வாய் அனைத்தையும் சரி செய்து சுத்தம் செய்யப்பட்ட மரங்களுக்கு வா்ணம் அடித்தும், 30 இடங்களில் சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டன.

முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட தலைவா் வேலு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் தேவேந்திரன், இயக்கத்தின் நிா்வாகிகள் லிங்கநாதன், சிவகுமாா், சுந்தரம் ஆகியோா் செய்து இருந்தனா்.

நிகழ்ச்சியில் தையல் இயந்திரம், இட்லி பாத்திரம், மூன்று சக்கர சைக்கிள், அயா்ன் பாக்ஸ், புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளாக வெண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 120 மாணவா்களுக்கு சீருடை , யோகா மையத்தில் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அரசு அலுவலகங்களுக்கு 10 பீரோக்கள், செங்கல்பட்டு குண்டூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 10 மின்விளக்கு, 10 மின்விசிறி மற்றும் பிரிண்டா் கொடுக்கப்பட்டது. திம்மாவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் தரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.