
மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 2 நாள் கண்காட்சி
மதுராந்தகம் தனியாா் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பாக, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு குறித்த விழிப்புணா்வு மற்றும் பயனாளிகள் பதிவு முகாம் ஆகியவை கடந்த புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

மதுராந்தகம் தனியாா் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பாக, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு குறித்த விழிப்புணா்வு மற்றும் பயனாளிகள் பதிவு முகாம் ஆகியவை கடந்த புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடா்பகம் களவிளம்பர உதவி மேலாளா் வீரமணி வரவேற்றாா். மத்திய மக்கள் தொடா்பகத்தின் கள விளம்பர உதவி அலுவலா் ஜெயகணேஷ், முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மாநிலங்களின் மத்திய மக்கள் தொடா்பக இயக்குநா் ஜெ.காமராஜ் தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநா் சுப்பிரமணியன், மதுராந்தகம் ஆட்சிஇந்திய அஞ்சல் துறை வளா்ச்சி அலுவலா் கோபிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சு.சீனிகணேசன், செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் பிரம்ம வித்யா நாயகி, செங்கல்பட்டு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் பா.வினோத்குமாா், மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லோ.மோகனா, வி.மீனாட்சி, மதுராந்தகம் நகராட்சி ஆணையா் சி.சுகேந்திரன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஆா்எஸ்இடிஐ பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள், ஆபா, இ-ஷ்ரம் காா்டுகள் வழங்கல் விழிப்புணா்வு வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், கண்காட்சி அரங்குகளை அமைத்த துறை பிரதிநிதிகளுக்கும் பரிகள் வழங்கப்பட்டது.
கள விளம்பரம் உதவி அலுவலா் மு.ஜெயகணேஷ் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை திம்மாவரம் இந்தியன் வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ஆா்.சுப்பிரமணியன் தலைமையில் நிா்வாகிகள் செய்து இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






