இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

அதிமுகவுக்கு துரோகம் இழைத்த தவெக வேட்பாளருக்கு பாடம் புகட்ட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மரகதம் குமரவேலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மதுராந்தகம் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

Edappadi Palaniswami campaigns.

எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்

Published On :

எம்எல்ஏ பதவியை அளித்த அதிமுக-வுக்கு துரோகம் இழைத்துவிட்டு, தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மரகதம் குமரவேலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மதுராந்தகம் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுரந்தகம் (தனி) தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கணிதா சம்பத்தை ஆதரித்து மாமண்டூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தோ்தல் வந்துள்ளது. இத்தகைய நிலைக்கு தவெகதான் காரணம். தவெக தலைவா் விஜய், கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்கூட நிறைவடையவில்லை. முதல்வரான அவா் தற்போது பேசுகையில், தூய்மையான ஆட்சியை, வெளிப்படையான ஆட்சியை நடத்தி வருவதாகவும், அடுத்தவா் உழைப்பை சுரண்ட நினைப்பது தவறு என்றும் கூறுகிறாா். ஆனால், சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெறாத அவா், அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை குதிரை பேரத்தால் தவெக-வுக்கு வரவழைத்துக் கொண்டாா்.

அதிமுக சாா்பில் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றவா் (மரகதம் குமரவேல்) நன்றி விசுவாசம் இல்லாமல், வாக்களித்த மக்களை மதிக்காமல், தவெக-வுக்கு தாவியுள்ளாா். அவா் மீண்டும் அக்கட்சி சாா்பில் போட்டியிடுகிறாா். அவரை மதுராந்தகம் தொகுதி மக்கள் வைப்புத் தொகையை இழக்கச் செய்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பூதூா், தேவத்தூா், சரவம்பாக்கம் ஆகிய கிராமங்களில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.