லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

"தவிக்கும் தாற்காலிக அரசு ஊழியர்கள்'

பொன்னேரி, ஜூலை 21: பல்வேறு அரசுத் துறைகளில் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில், அதிமுக ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட தாற்காலிக ஊழியர்கள், எப்போது நிரந்தரப் பணியாளர்களாக மாறுவோம் என எதிர்பார்த்து இருக்கின்றனர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:49 am

ம.சுந்​த​ர​மூ​ர்த்தி

பொன்னேரி, ஜூலை 21: பல்வேறு அரசுத் துறைகளில் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில், அதிமுக ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்ட தாற்காலிக ஊழியர்கள், எப்போது நிரந்தரப் பணியாளர்களாக மாறுவோம் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

கடந்த 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். அப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் 1986-ம் ஆண்டு முடிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 11,238 பேர் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் தாற்காலிகப் பணியாளர்களாக பல்வேறு அரசுத் துறைகளில் அப்போது பணியமர்த்தபட்டனர்.

இதையடுத்து இவர்கள் அனைவரும் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற நீண்ட நாள்களாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் இவர்கள் அனைவருக்கும் 17.02.07 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6212 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாமல் உள்ள மீதமுள்ளவர்கள் அரசுத் துறைகளில் காலியாகும் பணியிடங்களுக்கேற்ப மூன்று மாதத்துக்கு ஒரு முறை அதில் பணியமர்த்தப்படுவர் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

எழுத்துத் தேர்வு வைத்து தேர்ச்சி பெற்ற 6212 பேரில் 5613 பேர் மட்டும் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் மீதமுள்ள 599 பேர் இன்னமும் தாற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.

மேலும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறாத 5026 பேர் இன்னமும் ரூ.4 ஆயிரம் சம்பளத்திலேயே இளநிலை உதவியாளர்களாக பணியில் உள்ளனர். அரசுத் துறைகளில் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் என்னென்ன பணிகளை செய்கிறார்களோ அதே பணிகளை இவர்களும் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் மூன்றில் ஒரு பங்கு சம்பளத் தொகை கூட இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

தற்போதுள்ள விலைவாசி உயர்வில் அரசு வழங்கும் இந்தச் சம்பளத் தொகையை வைத்துக் கொண்டு ரேஷனில் போடப்படும் ஒரு ரூபாய் அரிசி வாங்கி சாப்பிட்டால் கூட தங்கள் குடும்பத்தை வழி நடத்த இயலாது என பொன்னேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் தாற்காலிக இளநிலை பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 40-க்கு மேல் ஆகிவிட்டது.

எனவே அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் 2003-ம் ஆண்டு முதல் பல்வேறு அரசு அலுவலகத்தில் தாற்காலிக இளநிலைப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் இவர்களை, நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி, ஊதிய உயர்வு அளித்தால் மட்டுமே இவர்களின் எதிர்காலம் வளமானதாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.