சென்னை, அக்.5: சாலை போடும் பணிக்கான ஒப்பந்தம் முடிவு செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள சாலைகள் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் வகையில் மாறி வருகின்றன.
சென்னை மாநகரில் 222 கி.மீ. நீளத்துக்கு 304 பஸ் வழித் தடங்கள் (பி.ஆர்.ஆர்.) உள்ளன. இந்த சாலைகள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சாலைகள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு புதுப்பிக்கப்படும்.
கடந்த ஜூன் மாதம் 18 சாலைகள் ஐந்து ஆண்டுகள் கடந்ததைத் தொடர்ந்து, புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. ஜூன் 12, 19 தேதிகளில் மொத்தம் 14 பேர் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்தனர்.
இவர்கள் விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஒப்பந்தம் முடிவு செய்யப்படவில்லை. ""நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் அளிப்பதற்காக, அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்'' என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பல்லாங்குழி சாலைகள்: இந்தக் குளறுபடியால் பெரும்பாலான பஸ் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இவை சவால் விடும் வகையில் அமைந்துள்ளன. பல பகுதிகளில் திட்டுத் திட்டாக சாலைகள் காணப்படுகின்றன.
இந்த மரணக் குழிகளில் இருந்து தப்பிக்க திடீரென பாதையைவிட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் விலகுவதால், விபத்துகளும், நெரிசல்களும் ஏற்படுகின்றன.
மாநகராட்சி ஆணையர் பேட்டி: ""ஒப்பந்தத்தை முடிவு செய்ய தலைமைப் பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கோரிய ஒப்பந்தப் பணிக்கு, 14 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஐந்து பேர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 பேரிடம் சாலையை வெட்டி எடுப்பதற்கான இயந்திரம் இல்லை. எனவே இவர்களுடைய ஒப்பந்தம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த ஒன்பது பேருக்குப் பதிலாக மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிடும்'' என்றார் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி.
""சாலையை வெட்டி எடுப்பதற்கான இயந்திரம் ஒப்பந்ததாரரிடம் இல்லை என்றால், ஒப்பந்தத்தை பிரித்த அன்றே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். நான்கு மாதங்கள் இழுத்தடித்ததன் காரணம் என்ன? ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத கவுன்சில் கூட்டங்களில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது உரிய பதில் கிடைக்கவில்லை.
செப்டம்பர் மாத கவுன்சில் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படப் போவதாக மேயர் தெரிவித்தார். ஆனால், இப்போது ஐந்து பேர் தகுதியானவர்கள் என கமிஷனர் தெரிவிக்கிறார்.
ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு மீண்டும் கோருவதால், மாநகராட்சிக்குதான் நஷ்டம் ஏற்படும். சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து விடுவதால், ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு ஒப்பந்தப்புள்ளிகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்கிறார் மாநகராட்சி கவுன்சில் எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி.
வீண் அரசியலுக்கு இடம் தராமல், நகரின் நலனைக் கருத்தில் கொண்டு சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


