சென்னை, அக்.8: சென்னை மாநகராட்சி தயாரிக்கும் மாநகர "டிஜிட்டல்' வரைபடம் 2010 ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்த வரைபடத்தை பொதுமக்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில், மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிகள், சாலைகள், கட்டடங்களை தனித்தனியே பெரிது செய்து பார்க்கும் வகையில், தனியார் இணையதளங்களில் ஏற்கெனவே செயற்கைக்கோள் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் வரைபடம் என்பதால் இவற்றை முழு தெளிவுடன் பார்க்க முடியாது. ஆனால், மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் "டிஜிட்டல்' வரைபடம், ஹெலிகாப்டர் மூலம் வானில் பறந்தபடி "ஏரியல் வியூ' எடுக்கப்பட்டதாகும். ஒவ்வொரு பகுதியையும் முழுத் தெளிவுடன், அனைத்துப் புள்ளி விவரங்களுடன் காண முடியும்.
172 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அடங்கியிருக்கும் சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, ஹெலிகாப்டரில் பறந்தபடி "தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்ஸி' படம் பிடித்தது. இந்தப் படத்தை இந்திய நில அளவைத் துறை, கடந்த ஒன்றரை ஆண்டு முயற்சி மூலம் "டிஜிட்டல்' படமாக மாற்றி படிப்படியாக சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்து வந்தது. கடந்த திங்கள்கிழமை (அக். 5) முழு அளவு படத்தையும் "டிஜிட்டல்' படமாக மாற்றி மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.
இந்த வரைபடத்தில், வார்டு எல்லை குறிக்கும் பணியை இப்போது மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை 83 வார்டுகளுக்கு எல்லை குறிக்கப்பட்டுள்ளது. அதோடு, புள்ளி விவரங்கள் (ஜி.ஐ.எஸ்.) சேகரிக்கும் பணிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
வீடுகள், கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றின் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்தப் புள்ளி விவரம் சேகரிக்கும் பணியில் எடுக்கப்படும். இப்போது 3, 4 வார்டுகளுக்கு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் 5, 6, 7 வார்டுகளுக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு, சோதனை அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி வசூலிப்பது, மாநகராட்சிக்கு சொந்தமான சொத்து விவரங்கள் உள்ளிட்ட மாநகராட்சித் தேவைகளை வைத்து இந்த "டிஜிட்டல்' வரைபடம் தயாரிக்கப்பட்ட போதும், குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரத் துறை, காவல்துறை உள்ளிட்ட மற்ற அரசுத் துறைகளுடனும் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளது. அவரவர்களது துறை விவரங்களையும் இதில் இணைத்து பயன்பெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
"சென்னை மாநகர டிஜிட்டல் வரைபடம் தயாரிப்புப் பணி வேகமாக நடைபெறுகிறது. வீடுகள், வணிக வளாகங்கள், சாலைகள் என விவரங்கள் அடங்கிய படத்தை முடிக்க மூன்று மாதங்கள் ஆகும். வரைபடத்தில் விவரங்கள் சேர்க்கும் பணி அதன் பின்னரும் தொடர்ந்து நடைபெறும்' என்றார் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

