நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின் ரயில்களில் பயணம் செய்ய இலவச பாஸ் மாதந்தோறும் விண்ணப்பிப்பதால் மாணவர்கள் அவதி

சென்னை, ஆக. 1: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்வதற்கான இலவச பாஸ் பெறுவதற்கு,  மாதந்தோறும் விண்ணப்பிப்பது நடைமுறையில் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரயில்வே துறை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:55 am

ச. குமரன்

சென்னை, ஆக. 1: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்வதற்கான இலவச பாஸ் பெறுவதற்கு,  மாதந்தோறும் விண்ணப்பிப்பது நடைமுறையில் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

ரயில்வே துறை தனது அலுவலர்கள், ஊழியர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு துறையினருக்கும் தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ரயில்களில் பயணம் செய்ய இலவச பாஸ்களை வழங்கி வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பல்வேறு வகையான பாஸ்களை ரயில்வே துறை வழங்கி வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்லவும், விளையாட்டுப் போட்டித் தொடர்களில் பங்கேற்கவும், விடுமுறை கால சுற்றுலா பயணம் மேற்கொள்ளவும் ரயில்வே துறை சிறப்பு பயணச் சலுகைகளை அளித்து வருகிறது. இதுதவிர  மாதாந்திர இலவச பயண அட்டைகளையும் ரயில்வே துறை வழங்குகிறது.

இதுதவிர ஆசிரியர்கள் குழுவாக கல்வி சுற்றுலா செல்லவும் பயணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பப் பயிலகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மாதாந்திர ரயில்வே சீசன் டிக்கெட்டுகளை (பாஸ்) தெற்கு ரயில்வே வழங்குகிறது.

மாணவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களுக்கு புறநகர் மின் ரயில்களில் இந்த இலவச பயண அட்டைகளைப் பயன்படுத்தி தினமும் இலவசமாக பயணம் செய்யலாம்.

சென்னை கோட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 22 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இந்த பாஸ் வழங்கப்படுகிறது.

பள்ளிக் கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு இந்த இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன்பின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது.

ஆனால், இதில் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை மட்டுமே வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு 75 சதவீதமும், ஊனமுற்றோருக்கு 50 சதவீதமும் இதில் கட்டணச் சலுகை உண்டு.

பிஎச்.டி. உள்ளிட்ட ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 35 வயது வரையிலும் ரயில் பயணத்தில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

இலவச பாஸ் பெறுவது எப்படி?

புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்ய இலவச பாஸ்களை வழங்க, அந்தந்த பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள்,

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட வணிக மேலாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு அந்த கல்வி நிறுவனங்கள் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,  இலவச மாதாந்திர ரயில் பாஸ் பெறுவதற்கான

விண்ணப்பங்கள் வழங்கப்படும். 50 படிவங்கள் கொண்ட ஒரு விண்ணப்பப் புத்தகத்துக்கு ரூ. 49 பள்ளி நிர்வாகங்கள் செலுத்த வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்களில் இருந்து பெற்று, தங்கள் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களின் நிலைய அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் இலவச ரயில் பாஸ் (மாதாந்திர இலவச சீசன் டிக்கெட்) வழங்கப்படும்.

மாணவிகள் அவதி:

ஆனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து இலவச ரயில் பாஸ் விண்ணப்பங்களைப் பெற்று, படிவங்களை பூர்த்தி செய்து, ரயில்வே நிலையங்களுக்கு சென்று சமர்ப்பிக்க அலைய வேண்டிய நிலை உள்ளது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவிகளும், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறார்களும் ரயில் நிலையங்களுக்கு மழைக்காலத்திலும் தனியாக, பாடவேளைகளைப் புறக்கணித்துச் செல்லும் நிலை தொடர்கிறது.

சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அலுவலர்களும், கோட்ட ரயில்வே வணிகப் பிரிவு அலுவலர்களும் இந்தப் படிவங்களை அச்சிட்டு, விநியோகிப்பது முதல் பாஸ்களை வழங்கி, பதிவு செய்து விவரங்களையும், சான்றுகளையும் பராமரிப்பது வரை கூடுதல் பணிச்சுமையை சந்திக்க வேண்டிய நிலையுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை ஸ்மார்ட் கார்டு பாஸ்:

இதற்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒரு முறை கல்வி நிலையங்களின் சான்றுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் போதும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினால் இலவச ரயில் பாஸ் பெறுவதற்காக மாணவர்கள் மாதந்தோறும் அலைய வேண்டிய மன அழுத்தத்துக்கு ஆளாவதை தவிர்க்க இயலும்.

மேலும்,   மாநில அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஸ்மார்ட் கார்டு முறையில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதைப் போன்று இலவச ரயில் பாஸ்களையும் வழங்க வேண்டும்.

 இதன்மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் தேவையற்ற பணிச்சுமையையும், பல மடங்கு நிர்வாகச் செலவையும் தவிர்க்கலாம். விண்ணப்பங்களை அச்சடிக்க பயன்படுத்தப்படும் காகிதம் உள்ளிட்ட இதர ஸ்டேசனரி பொருள்களின் செலவையும் பல மடங்கு குறைக்க வாய்ப்புள்ளது. இது சூழல் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும். தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.