தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆமை வேகத்தில் ஒரகடம் மேம்பால கட்டுமானப் பணி

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேம்பால கட்டுமானப் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. ÷சென்னை மாநகரின் புறநகர் பகுதியான ஒரக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:59 am

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேம்பால கட்டுமானப் பணி மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

÷சென்னை மாநகரின் புறநகர் பகுதியான ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு பன்னாட்டு தொழிற்சாலைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்ற எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையை இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும், அதேபோல் சிங்கபெருமாள்கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலையை ஒருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தி மேம்படுத்த அரசு திட்டமிட்டு சாலை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

÷இந்நிலையில் சிங்கபெருமாள்கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலையும், வண்டலூர் வாலாஜாபாத் சாலையும் சந்திக்கும் ஒரகடம் கூட்டுச் சாலையில் ரூ.20.89 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் 658 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் கட்டும்பணி கிழக்கு கடற்கரைச் சாலை கட்டுமானப் பணி நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இப்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும். இந்நிலையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு 5 மாதங்களாகியும் 10 சதவீத பணிகள் கூட இன்னமும் முடிக்கப்படவில்லை. இதனால் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  இது குறித்து கண்காணிப்பு பொறியாளர் கிரியிடம் கேட்டதற்கு அவர் கூறியது:

  "மேம்பாலம் கட்ட 18 மாதங்கள்தான் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் கடந்த மார்ச் மாதம்தான் மேம்பாலம் கட்ட கிழக்கு கடற்கரைச் சாலை கட்டுமான பணிநிறுவனத்திடம் ஒப்பந்தம் போடபட்டது.

÷பணிகளும் தாமதமாகத்தான் தொடங்கியது, மேலும் அவ்வபோது வரும் மழையினாலும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட 18 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.