நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

11 மாதங்கள் ஆகியும் துப்பு துலங்காத வியாசர்பாடி ரயில் விபத்து வழக்கு

சென்னை, மார்ச் 21: வியாசர்பாடி ரயில் விபத்து வழக்கில், கடந்த 11 மாதங்களாகியும் துப்பு துலக்குவதில் இன்னமும் தேக்கநிலை நீடிக்கிறது. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:35 pm

ச. குமரன்

சென்னை, மார்ச் 21: வியாசர்பாடி ரயில் விபத்து வழக்கில், கடந்த 11 மாதங்களாகியும் துப்பு துலக்குவதில் இன்னமும் தேக்கநிலை நீடிக்கிறது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற  அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

கடந்த 29.4.2009}ல் சென்னை சென்ட்ரல்} மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட இருந்த புறநகர் மின் ரயில் (எம்.டி.3) காலை 5.15 மணிக்கு மர்ம நபரால் கடத்தப்பட்டது.

மணிக்கு 90 கிலோ மீட்டர் அளவுக்கு அதிவேகத்தில் இயக்கப்பட்ட இந்த மின் ரயில் பேசின் பிரிட்ஜ் பகுதியை கடந்து வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மின் ரயிலை ஓட்டிச் சென்ற மர்மநபர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காயமுற்றனர்.

இந்த விபத்தில் மின் ரயிலின் என்ஜின், 3 பெட்டிகள் மற்றும் சரக்கு ரயிலின் என்ஜின் ஆகியவையும் பலத்த சேதமுற்றன.

இதனால், தெற்கு ரயில்வேக்கு பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பிரதான லைனில் இந்த ரயில் இயக்கப்பட்டிருந்தாலோ அல்லது மற்றொரு மின் ரயில் மீது மோதியிருந்தாலோ ஏராளமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனத் தெரியவந்தது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தேக்கம்: இது குறித்து பெரம்பூர் ரயில்வே போலீஸôர் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸôருக்கு மாற்றப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட "மர்ம நபரின்' சடலத்தை யாரும் கோரவில்லை. இந்த மர்ம நபரின் கையில் "மெகராஜ்' என்று பச்சை குத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே ரயில்வே தலைமை பாதுகாப்பு அதிகாரி கே.ஜே.எஸ். நாயுடு இந்த விபத்து குறித்து ஆய்வு நடத்தி ரயில்வேக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதன்பின் சிபிசிஐடி தனிப்படை போலீஸôர் ஐதராபாத், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தகவல் தருவோருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த வழக்கில் உள்ள சதி பின்னணி குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்: பல்வேறு தனிப்படைகள் அமைத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் விசாரணை மேற்கொண்டபோதும் கடந்த 11 மாதங்களாக இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி. அருண் திருப்பூருக்கு மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.யாக மகேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார்.

ஆனாலும், இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

உருக்குலைந்த ரயில் } நினைவுச் சின்னமா? சம்பவம் நடந்த வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே, விபத்தில் உருக்குலைந்த ரயில் என்ஜின், மற்றும் ரயில் பெட்டி ஆகியவை சிதறிய உதிரிபாகங்களுடன் கிடக்கின்றன.

இந்த வழியாக, இயக்கப்படும் ரயில்களில் செல்லும் பயணிகள் பலர் சேதற்று கிடக்கும் இந்த ரயில் என்ஜினையும், பெட்டியையும் அதிர்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

இது பயணிகளிடையே உளவியல் ரீதியாக நெருடலையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, இந்த ரயில் என்ஜின்}பெட்டியை அகற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே கோரியுள்ளது.

ஆனால், இந்த வழக்கில் புலன் விசாரணைக்கு முக்கிய தடயமாக இந்த ரயில் என்ஜின் உள்ளதால், சி.பி.சி.ஐ.டி.போலீஸôர் இதற்கு இதுவரை அனுமதி

தரவில்லை.

இதனால், உருக்குலைந்த இந்த ரயில் பெட்டி இப்போது இரவில் சமூக விரோதிகளின் "புகலிடமாக' மாறிவிட்டது. நாட்டையை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வியாசர்பாடி ரயில் விபத்து வழக்கில், பல மாநிலங்களைச் சேர்ந்த கும்பலின் சதி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.