/

உயர் நீதிமன்றத்தில் நாளைமுதல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு

சென்னை, அக். 8: சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை அமலாகிறது. அதன் ஒரு பகுதியாக உயர் நீதிமன்ற வளாகத்தில் இரவு 8 மணிக்குப் பிறகு எவரையும் அனுமதிப்பதில்லை என்று ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

சென்னை, அக். 8: சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை அமலாகிறது. அதன் ஒரு பகுதியாக உயர் நீதிமன்ற வளாகத்தில் இரவு 8 மணிக்குப் பிறகு எவரையும் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் திங்கள்கிழமை காலை முதல் அமலாகிறது.

துணை ஆணையர் டி.எஸ். அன்பு, உதவி ஆணையர் கே.என். முரளி ஆகியோர் தலைமையில் 430 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் மூன்று ஷிப்டுகளாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் உள்ள ஏழு வாயில்கள் காலை 8 மணி முதல் திறந்திருக்கும்.

கிழக்கு திசையில் உள்ள நீதிபதிகள் வாயிலில் நீதிபதிகளைத் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை. மற்ற ஆறு வாயில்கள் வழியாக வழக்குரைஞர்கள், குமாஸ்தாக்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள வடக்கு வாயில் வழியாக செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வாயில் வழியாக உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வங்கி, தபால் நிலையம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியர்கள் செல்லலாம்.

நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வழக்குரைஞரிடம் கடிதம் பெற்றிருக்க வேண்டும். அந்தக் கடிதத்தைக் காட்டி வடக்கு வாயில், ஆவின் பால் பூத் வாயில், எஸ்பிளனேடு காவல் நிலையம் அருகில் உள்ள வாயில் வழியாக உள்ளே வரலாம்.

தெற்கு திசையில் உள்ள ஏ வாயில் வழியாக வழக்குரைஞர்கள், குமாஸ்தாக்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனுமதிக்கப்படுவர் அங்குள்ள பி வாயில் வழியாக அனைவரும் வெளியே செல்ல வேண்டும். சட்டக் கல்லூரியின் மேற்கு மற்றும் வடக்கே உள்ள வாயில்கள் நிரந்தரமாக மூடியிருக்கும்.

அடையாள அட்டை: நீதிமன்ற வளாகத்தில் நுழையும் வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.