உதகையை அடுத்த ஃபாரஸ்ட் கேட் பகுதியில் அங்கன்வாடி அமைத்துத் தர வலியுறுத்தி குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம், அப்பகுதி பெண்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஃபாரஸ்ட் கேட் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி இல்லை. குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். எனவே பாரஸ்ட் கேட் பகுதியில் புதிதாக ஒரு அங்கன்வாடி அமைத்துத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.
இது குறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்

ஆரணியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அங்கன்வாடி, நியாயவிலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு

ஆண்டகளூா்கேட் பகுதியில் லாரிகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



