சென்னை, ஏப். 6: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிகத் தளங்களை அமைப்பது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் (சி.எம்.டி.ஏ.), மெட்ரோ ரயில் நிர்வாகமும் ஆராய்ந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வருமானத்தைப் பெருக்கிடும் வகையில் வணிகத் தளங்கள் அமைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வணிகத் தளங்கள் என்றால் மிகப்பெரிய கட்டடங்களாக அல்லாமல், பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப குறைந்த அளவிலான கடைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்டப் பணிகளை, சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலுக்காக அமையவுள்ள 32 நிலையங்களிலும் இந்த வணிகத் தளங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்கான ஆய்வை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் மெற்கொள்ள உள்ளது.
அவ்வாறு வணிகத் தளங்கள் அமைக்கப்பட்டால் அங்கு கடைகள் அமைக்கும் உரிமைகள் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை கட்டுமானப் பணிகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் அடுத்தாண்டு இறுதியில் இயக்கப்படவுள்ளது. அதற்குள் வணிகத் தளங்களை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டம்: மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையிலிருந்து, சென்னை விமான நிலையம் வரை 23 கி.மீ. தொலைவுக்கான பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரையிலான 14 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சைதாப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை 9 கி.மீ. தூரம் மேம்பாலத் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாவது கட்டம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தூரம் வரையிலான பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதில் 10 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாகவும், 12 கி.மீ. தூரம் மேம்பாலமாகவும் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஒட்டு மொத்தமாக 45 கி.மீ. தூரம் வழித்தடத்தில் 24 கி.மீ. சுரங்கத்திலும், 21 கி.மீ. மேம்பாலமாகவும் அமைக்கப்படுகிறது. சுரங்கத்தில் 19 நிலையங்களும் மேம்பாலத்தில் 13 நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. 32 ரயில் நிலையங்களிலும் வணிகத் தளங்கள் அமைக்கப்பட உள்ளன.
குளிரூட்டப்பட்ட ரயில் நிலையங்கள்: சுரங்கப்பாதையில் அமைக்கப்படும் ரயில் நிலையங்களில் 24 மணி நேரம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். இதேபோன்று அங்கு அமையவுள்ள வணிகத் தளங்களிலும் குளிர்சாதன வசதி செய்யப்படும்.
சுரங்கத்தில் ஒரு ரயில் நிலையம் அமைக்க ரூ.100 கோடியும், மேம்பாலத்தில் ஒரு நிலையம் அமைக்க ரூ.30 கோடியும் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


