குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து மீண்டும் எப்போது போடப்படும்?

'எல்லோ ஃபீவர்' என்று அழைக்கப்படும் 'மஞ்சள் காய்ச்சல்' பாதிப்புக்கு உரிய தடுப்பூசி மருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2013, 4:25 am IST

"எல்லோ ஃபீவர்' என்று அழைக்கப்படும் "மஞ்சள் காய்ச்சல்' பாதிப்புக்கு உரிய தடுப்பூசி மருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களின் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து இன்னும் ஒரு வாரத்தில் பயணிகளுக்கு கிடைக்கத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் காய்ச்சல்: "ஏடீஸ் எஜிப்டை' எனப்படும் கொசு காரணமாக "எல்லோ ஃபீவர்' எனப்படும் மஞ்சள் காய்ச்சல் (வைரஸ் காய்ச்சல்) ஏற்படுகிறது. இந்தக் காய்ச்சல் அங்கோலா, பெனின், எத்தியோப்பியா, சூடான், ஜாம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரேசில்-கொலம்பியா, பிரெஞ்ச் கயானா, பெரு, டிரினிடாட், வெனிசுலா, பனாமா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்வோர் யாராக இருந்தாலும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டு சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்ட பிறகு, தடுப்பூசி மருந்து செயல்பட ஆரம்பித்து 10 நாள்கள் கழித்துத்தான் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து சான்றிதழை அளித்தால்தான் விமானம் அல்லது கப்பலில் மேலே குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிப்பது வழக்கமாக உள்ளது.

ஏனெனில் மேலே குறிப்பிட்ட நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அந்த நாட்டுக்கு பயணமாகச் செல்வோர், அந்த நாட்டிலிருந்து மஞ்சள் காய்ச்சலை சொந்த நாட்டுக்கு மீண்டும் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்வது கட்டாயம் என்ற நடைமுறை நீண்ட காலமாக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு செல்லும்: மஞ்சள் காய்ச்சலுக்கு உரிய தடுப்பூசி மருந்தை ஒருமுறை போட்டுக் கொண்டால், 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும். புதிதாக பயணம் செய்வோர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கும் தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டு சான்றிதழ் பெறுவது அவசியம்.

தடுப்பூசி மருந்து இல்லாமல் போனது ஏன்? மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்தை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்து அளித்து வந்தது. அந்த நிறுவனம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விநியோகத்தை நிறுத்தி விட்டதால், கடந்த 3 மாதங்களாக தடுப்பூசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

காத்திருக்கும் 1200 பயணிகள்: சென்னை கிண்டியில் உள்ள கிங் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி மையம், துறைமுக மருத்துவமனை ஆகியவற்றில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து ரூ.500-க்கு போடப்படுவது வழக்கம். ஆனால் தடுப்பூசி மருந்து கையிருப்பில் இல்லாததால் கிங் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி மையத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 900-க்கும் மேற்பட்ட பயணிகள், கிங் தடுப்பூசி மருந்து மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடுப்பூசி மருந்து குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சாதகமான முறையில் தடுப்பூசி மருந்து: இந்த நிலையில் அண்மையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புதிய நிறுவனத்துடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விநியோக ஏற்பாட்டை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சிரிஞ்சில் (ஊசியில்) ஏற்கெனவே நிரப்பப்பட்ட நிலையில் தடுப்பூசி மருந்து ("சிங்கிள் டோஸ்') இனி விநியோகிக்கப்பட உள்ளது. கிங் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி மையத்துக்கு 500 பயணிகள் பலன் பெறும் வகையில், வரும் மே 17-ஆம் தேதியன்று குறிப்பிட்ட அளவு தடுப்பூசி மருந்துகளை ("சிங்கிள் டோஸ்') பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அளிக்க உள்ளது. எனினும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் வரும் தேதியை உறுதிப்படுத்திக் கொண்டு அது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கிங் தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி மைய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று நாடு முழுவதும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மருந்து கிடைக்கும் வகையில் ஆவன செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.