சென்னை வியாசார்பாடியில் மின்வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்த விவரம்:
வியாசர்பாடி, சர்மாநகர், சாஸ்திரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை இரவு வரை நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் மின் வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடி, ஜன்னல், மேஜைகளை நொறுக்கி சூறையாடினர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் பொது மக்களை சமாதானம் செய்தனர்.
மேலும் மின் விநியோகமும் வழங்கப்பட்டது.
மின் வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து அந்த அலுவலகத்தின் உதவிப் பொறியாளர் ராமையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சாஸ்திரி நகரை சேர்ந்த பூமிநாதன், பாலன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி.: போஜ்சாலா கோயில் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லிம் வாரியம்

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்; ஒருவா் கைது

கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா: மாவட்டக் கல்வி அலுவலா் பங்கேற்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
