சென்னையில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்:
ரயில் எண் 06092: அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்:
ரயில் எண் 00616: அக்டோபர் 25 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு ரயில்:
ரயில் எண் 06093: அக்டோபர் 23 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில்:
ரயில் எண் 00617: அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
ரயில் எண் 00618: அக்டோபர் 18, 25 தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


