தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இலக்கியப் பரிசளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது.
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான "மூத்த தமிழறிஞர் விருது' முனைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் கொண்டது இந்த விருது.
திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு, இலக்கியப் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. "தங்கர்பச்சான் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது.
இலக்கியப் பரிசளிப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணிசீதை மன்றத்தில் நடைபெறுகிறது. விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் தினத்தந்தி நாளிதழ் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்றுப் பேசவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









