தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இனப்பெருக்க மையம் மூடப்படுவதால் நாட்டு நாய்கள் இனம் அழியும் அபாயம்

நாட்டு நாய்களின் இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே சைதாப்பேட்டையில் உள்ள இனப்பெருக்க மையத்தை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

News image
Updated On :17 டிசம்பர் 2016, 10:46 pm

நாட்டு நாய்களின் இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே சைதாப்பேட்டையில் உள்ள இனப்பெருக்க மையத்தை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாட்டு மாடுகளை அழிக்க திட்டமிட்டு ஜல்லிக்கட்டுக்கு விலங்கு நல அமைப்புகள் போராடி தடைபெறுவது போல், நாட்டு நாய் இனங்களை அழிக்க இத்தகைய முயற்சிகள் நீதிமன்றங்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 1980 -ஆம் ஆண்டு, சென்னை சைதாப்பேட்டையில் அரசு நாய்கள் இனப்பெருக்க மையம் தொடங்கப்பட்டது. இங்கு நாட்டு நாய்கள், சிப்பி பாறை, ராஜபாளையம் மற்றும் கோம்பை உள்ளிட்ட உள்நாட்டு நாய் வகைகளை பாதுகாக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த மையம் போதுமான பராமரிப்பு இல்லாமலும், தொற்று நோய்களைப் பரப்பும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது என்றும், இங்கு பராமரிக்கப்படும் நாய்களுக்கு முறையான உணவு, தண்ணீர்கூட சரிவர வழங்கப்படுவதில்லை எனக் கூறி, "பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு கடந்த 2013 -இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மையத்தை 2 மாதங்களில் மூடும்படி அண்மையில் உத்தரவிட்டுள்ளது நாட்டு நாய் வளர்ப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், உண்மையில் நம் நாட்டு நாய்களே வளர்ப்பதற்கு சிறந்த ரகங்கள். அவற்றை பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும். நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைகளும் அவையே என்று நாய்களை வளர்க்கும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோம்பை, சிப்பிபாறை போன்றவற்றை ஆபத்தான இனங்கள் போல் சித்தரித்து நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது பீட்டா அமைப்பு. நாட்டு நாய்கள் குறித்த தகவல்களையும் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இனப்பெருக்க மையத்தில் கோம்பை வகை நாய் கூண்டை கடித்து துப்பியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இவை இனப்பெருக்க மையத்தில் இருந்தால் மற்ற நாய்களுக்கு பாதிப்பு ஏற்படும்; இது வளர்ப்பதற்கான நாய் இல்லை என்பது போல சித்தரித்து வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், நாட்டு நாய் வளர்ப்பு ஆர்வலருமான பூபதி முருகேஷ் கூறியதாவது:
சைதாபேட்டையில் இயங்கி வந்த நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தில் போதிய வசதி இல்லை எனக் கூறி, பீட்டா அமைப்பு மனுதாக்கல் செய்திருந்தது. போதிய வசதிகள் இன்னும் அங்கு செய்யப்படாததால் மையத்தை மூட வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு இடத்தில் வசதி இல்லாவிடில் அங்கு வசதியை ஏற்படுத்தக் கூடாது அதை மூடிவிட வேண்டும் என்ற ரீதியில் தீர்ப்பு எப்படி அளிக்கப்பட்டது என்று புரியவில்லை. வங்கிகளில் கூட பெரும்பாலானவர்களுக்கு தற்போது பணம் கிடைக்கவில்லை. அதற்காக போதிய வசதியில்லை எனக் கூறி வங்கிகளையும் மூடிவிடலாமே? எனக் கேட்க தோன்றுகிறது என்றார் பூபதி முருகேஷ்.
கண்ணி,ராஜபாளையம் இனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.