தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம்: அடுத்த ஆண்டு இறுதியில் தொடக்கம்: 90 சதவீதம் சுரங்கப் பாதையில் அமையும்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்டத் திட்டம் பணியில் 90 சதவீதம் சுரங்க வழிப் போக்குவரத்தாகவே அமையும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On :23 டிசம்பர் 2016, 11:36 pm

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்டத் திட்டம் பணியில் 90 சதவீதம் சுரங்க வழிப் போக்குவரத்தாகவே அமையும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாதவரம் -கலங்கரை விளக்கம், கோயம்பேடு -ஈஞ்சம்பாக்கம், மாதவரம் -பெரும்பாக்கம் ஆகிய மூன்று மார்க்கங்களில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை அடுத்தாண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று வழித்தடங்களின் 80 கிலோ மீட்டர் நீள பாதையில் 90 சதவீதம் சுரங்கப் பாதையாக இருக்கும். இந்தத் திட்டப் பணிகளுக்கு ரூ.36,100 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது முதல்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்பணிகளை 2017 -ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரம் -கலங்கரை விளக்கம்: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி, மூன்று வழித்தடங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, முதல் வழித்தடம் மாதவரம்- கலங்கரை விளக்கம் இடையே 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இதற்கான உத்தேச செலவு ரூ.8,075 கோடி. இந்த வழித்தடத்தில் பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, அண்ணா மேம்பாலம் (ஜெமினி), ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் வழியாகச் செல்லும். இந்த இடங்கள் அனைத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கோயம்பேடு -ஈஞ்சம்பாக்கம்: கோயம்பேடு - ஈஞ்சம்பாக்கம் இடையே 27 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.12,825 கோடி செலவில் இரண்டாவது வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம், பனகல் பார்க், வெங்கட் நாராயணா ரோடு, நந்தனம், ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆர்.கே. மடம் சாலை, மந்தைவெளி, அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் (பஸ் நிலையம் அருகே), கொட்டிவாக்கம் வழியாகச் செல்கிறது.
மாதவரம் - பெரும்பாக்கம்: மூன்றாவது வழித்தடம் மாதவரம்- பெரும்பாக்கம் இடையே 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.15,200 கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.), ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் வழியாகச் செல்லும். தேவைப்பட்டால் பள்ளிக்கரணை வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்படும்.
90 சதவிதம் சுரங்கப் பாதை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. இத்திட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், விரிவான திட்ட அறிக்கையும், திட்ட மதிப்பீட்டுச் செலவும் இறுதி செய்யப்படும். அடுத்த ஆண்டு இறுதியில் இப்பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.