டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கேள்விக்குறியாகும் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம்

பல்வேறு பிரச்னைகளை மூடி மறைக்கும் வேலையில் சென்னைத் துறைமுக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால், துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2016, 10:10 pm

முகவை க.சிவக்குமார்

பல்வேறு பிரச்னைகளை மூடி மறைக்கும் வேலையில் சென்னைத் துறைமுக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால், துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் இந்தத் துறைமுகம் 130 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்தது. ஆண்டுக்கு சுமார் 6.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள் வரை கையாளப்பட்டு வந்தது.

சென்னை பெருநகரத்தின் எல்லைக்குள் இந்தத் துறைமுகம் அமைந்துள்ளதால், விரிவாக்கம் செய்வதில் பெரும் சிக்கல்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன.

ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்: சென்னைத் துறைமுகத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறித்து ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஒஐஇஅ- ஒஹல்ஹய் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் இர்ர்ல்ங்ழ்ஹற்ண்ர்ய் அஞ்ங்ய்ஸ்ரீஹ்) ஆய்வறிக்கையை துறைமுக நிர்வாகத்திடம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ், "முன்பைவிட போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாகவும், காசிமேடு பவானியம்மன் கோயில் எல்லையிலிருந்து துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத்துக்கு வர 17 நிமிடங்கள் மட்டுமே ஆவதாகவும் ஆய்வறிக்கையில் உள்ளது' என்று கூறியுள்ளார்.

ஆனால், நடைமுறையில் ஒரு நாள்கூட இது சாத்தியமல்ல என்பதே உண்மை.

பல கி.மீ. தொலைவுக்கு காத்திருப்பு ஏன்? இந்தக் கூட்டத்தில் முதலாவது சரக்குப் பெட்டக முனையத்தை நிர்வகித்து வரும் டி.பி. வேர்ல்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் சிங் பேசுகையில், "போக்குவரத்து நெரிசல் இருப்பதாகக் கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை. துறைமுக நுழைவாயிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு வரை வரிசையில் காத்திருந்த சரக்குப் பெட்டக லாôõகளை ஆய்வு செய்தபோது, அவை துறைமுகத்திற்குள் நுழைவதற்காகக் காத்திருக்கவில்லை; ஆவணங்கள் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காகவே காத்திருப்பதாக லாரி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்' என்று கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தைப் பயன்படுத்துவோரின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை எனப் புகார் கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததா?, இல்லையா? இந்த நிலையில், சரக்குப் பெட்டக லாரிகள் போக்குவரத்து நெரிசலைத் தீர்த்துவிட்டதாகவும் துறைமுக நிர்வாகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆனால், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைத் துறைமுகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான சரக்குப் பெட்டக லாரிகள் வரிசைகட்டி நின்றன. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, லாரிகள் பல மணி நேரத்துக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

மேலும், அந்தப் பகுதியில் ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்ற தண்ணீர் லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை, மகள் ஞாயிற்றுக்கிழமை இறந்த சம்பவமும் நடந்தது.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்: இந்தப் பிரச்னைகள் இப்படியிருக்க, சுங்க இல்ல முகவர்கள் சங்க நிர்வாகிகள் கே.வி.வி. கிரி, நடராஜா ஆகியோர் கூறியதாவது:-

மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் கைவிடப்பட்டது, தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, அருகில் அமைந்துள்ள தனியார் துறைமுகங்களின் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

பொதுத் துறை நிறுவனம் என்பதால், கவனம் செலுத்தவும் மறுக்கின்றனர். இதனால் இந்தத் துறைமுகத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், தனியார் நிறுவனத்தினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

திருப்பூர், ஈரோடு, கோவை, ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன என்றனர்.

தமிழக அரசு தலையிடுமா? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்னைத் துறைமுகம் இருந்தாலும், தமிழகத் தொழில் வளர்ச்சியின் முக்கிய ஆதாரம் என்பதைக் கவனத்தில் கொண்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக அரசின் உதவியை துறைமுக நிர்வாகம் நாட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் சென்னைத் துறைமுகம் காட்சியிடமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.