சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னையில் குறும்பட விழா

சென்னை வேளச்சேரியிலிருந்து தாம்பரம் கிழக்கு செல்லும் சாலையில் உள்ளது ஆசான் நினைவு மற்றும் கலை அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் காட்சித் தொடர்பியில் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஆசான் விடியோ அவார்ட்ஸ் (ஏவிஏ) எனும் குறும்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :6 மார்ச் 2016, 2:28 pm

க.தி.மணிகண்டன்

சென்னை வேளச்சேரியிலிருந்து தாம்பரம் கிழக்கு செல்லும் சாலையில் உள்ளது ஆசான் நினைவு மற்றும் கலை அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் காட்சித் தொடர்பியில் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஆசான் விடியோ அவார்ட்ஸ் (ஏவிஏ) எனும் குறும்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு (2016) 10-ஆவது ஏவிஏ விழா வெள்ளிக்கிழமை (மார்ச்  4) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு "நம்மவர்", "நாளை நமதே", "மறுபக்கம்" உள்ளிட்ட படங்களை இயக்கிய சேது மாதவன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக "ஈரம்", "வல்லினம்" படங்களை இயக்கிய அறிவழகன் வந்திருந்தார்.

காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கியதும் தேர்வு செய்யப்பட்ட படங்கள் வரிசையாக திரையிடப்பட்டன. அவற்றில், சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னைகள் குறித்து "குருதி" எனும் திரைப்படம் அதிக கவனத்தை ஈர்த்தது.

கோவை மாணவர் ஒருவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

"டேஸ்ட் ஆஃப் சின்" என்று மற்றொரு குறும்படம்.. ஒரு பாலின ஈர்ப்பை மையமாக வைத்து இந்தப் படம் இயக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை எத்திராஜ் கல்லூரி மாணவி இயக்கி இருந்தார்.

இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆவணப் படப்பிரிவில்  "ஹோலி காக்டெய்ல்" என்ற பெயரில் கூவம் நதிக்கரையின் வரலாற்றையும், அதனால் எதிர்கொள்ளப்பட்டு வரும் பிரச்னைகளையும் இயக்குநர் பேசி உள்ளார்.

தஞ்சாவூர் சுவரோவியங்கள் குறித்தும் ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இதனிடையே, அனிமேஷன் படங்களும் திரையிடப்பட்டன.

சுமார் 12.30 மணியளவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

இயக்குநர் அறிவழகன் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

சுமார் 1.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது ஆசான் விடியோ அவார்ட்ஸ் நிகழ்ச்சி...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.