/

சென்னையில் பலத்த மழை: பல இடங்களில் தேங்கிய மழைநீர்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது . இதனால் பல இடங்களில் மழை நீர் சாலையில் ஓடி வெள்ளமாகத் தேங்கியது.

News image
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் வேப்பேரியில் கரைபுரண்டோடும் மழை நீர்.
Updated On :29 ஜனவரி 2024, 4:23 pm

DIN

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது . இதனால் பல இடங்களில் மழை நீர் சாலையில் ஓடி வெள்ளமாகத் தேங்கியது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். சில கிராமங்களில் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகிறார்கள். சில இடங்களில் கலங்கலான நீர் குடிக்க பயன்படுத்தப்படுகிறது.
சென்னையைப் பொருத்தவரை கடந்த வாரம் வரை வெயிலின் தாக்கம் இருந்தது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பலத்த மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ,
தியாகராய நகர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், கிண்டி, சேப்பாக்கம், அண்ணா நகர் என பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
புறநகர்ப் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பல இடங்களில் சாலைகளிலும், குறுகிய தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் வேப்பேரியில் கரைபுரண்டோடும் மழை நீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.