மெட்ரோ ரயில் பணியினால் அண்ணா சாலையில் திடீர் பள்ளம்

சென்னை மெட்ரோ பணியின் காரணமாக அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.

சென்னை மெட்ரோ பணியின் காரணமாக அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.
இது குறித்த விவரம்:
சென்னையில் நடைபெற்றும் வரும் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, அவ்வப்போது அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் பள்ளம் ஏற்படுகிறது. சில இடங்களில் பள்ளத்தில் இருந்து சிமென்ட் கலவை, சகதி வெளியேறும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அண்ணாசாலையில் ஆயிரம்விளக்கு ஆனந்த் திரையரங்கு அருகே உள்ள சுரங்கப்பாதை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென 2 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த மெட்ரோ ரயில் திட்ட ஊழியர்கள், புதிதாக உருவான பள்ளத்தை சிமென்ட் கலவை மூலம் நிரப்பி, மூடினர். இந்த திடீர் பள்ளத்தின் காரணமாக அண்ணா சாலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மெட்ரோ ரயில் திட்டப் பணியால், ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகேயும் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தையும் மெட்ரோ ஊழியர்கள், உடனடியாக சிமென்ட் கலவை மூலம் மூடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com