/

வெற்றி தேடி வரும்: ஓபிஎஸ்

தர்மத்தின் வழி நடக்கும் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் வெற்றி விரைவில் எங்களைத் தேடி வரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News image
அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் சென்னை எழும்பூரில் புதன்கிழமை நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

தர்மத்தின் வழி நடக்கும் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் வெற்றி விரைவில் எங்களைத் தேடி வரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:
ஏழை எளிய மக்கள், தேவையுள்ளோர் மீது இறக்கம் காட்டும் மாதம் ரமலான். இது பொறுமையின் மாதமும் ஆகும். அதனால் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுகின்றனர். இஸ்லாமியர்கள் பசியை உணர்ந்து கொள்ளவும், மனித நேயத்தை காக்கவும் 30 நாள்கள் நோன்பு இருக்கின்றனர்.
ஐம்பெரும் கடமைகளில் நோன்பை தவிர்த்து, மற்ற இறை வழிபாடுகளை எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் செயல்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் ஜமாத் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.