தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பன்முகத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்: சீதாராம் யெச்சூரி

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

News image
தமிழ் உரிமை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், அக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன், விடுதலை சிறுத்த
Updated On :26 ஜூன் 2017, 11:29 pm

DIN

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்} கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து சென்னையில் திங்கள்கிழமை நடத்திய தமிழ் உரிமை மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற அரசியல் தலைவர்கள் அமர்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
மோடி அரசின் 3 ஆண்டு ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியவில்லை, வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இதிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக ஹிந்தியைத் திணிக்கிறார்கள். ஹிந்தி திணிப்பில் 2 நோக்கங்கள் உள்ளன. ஒன்று மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது, இன்னொன்று ஆர்.எஸ்.எஸ் . பாஜகவின் சித்தாந்தமாகிய ஹிந்துத்துவா, ஹிந்து தேசம் என்பதை நிலைநாட்டுவது. அதன் ஒரு பகுதியாகவே ஹிந்தியைத் திணிக்கிறார்கள்.
பல தேசிய இனங்கள், பல மொழிகள் கொண்ட நாடாகத்தான் இந்தியா உருவானது. இந்த பன்முகத்தன்மைப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படுவது அவசியம். மற்ற மொழிகளின் மீது ஒரு மொழியின் ஆதிக்கம் என்பது இந்திய ஒற்றுமைக்கு தான் பேராபத்தாக முடியும். ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதும் இந்தியாவின் ஒற்றுமைக்காகத் தான்.
ஆரியர்கள் தான் இந்தியாவின் பூர்வீக குடிகள் என்ற கோட்பாட்டுக்கு கீழடி அகழ்வாய்வின் உண்மைகள் எதிராக இருக்கின்றன. ஆகவே தான் அந்த அகழ்வாராய்ச்சியை முடக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயல்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதும், பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதும் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது என்றார்.
இந்த மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, மார்க்சிஸ்ட் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.