எம்.டி.சித்த மருத்துவம்: தகுதிப் பட்டியல் வெளியீடு
முதுநிலை சித்த மருத்துவ (எம்.டி) படிப்புக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


முதுநிலை சித்த மருத்துவ (எம்.டி) படிப்புக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி சென்னை மற்றும் பாளையங்கோட்டை ஆகியவற்றில் 2017 -2018-ஆம் கல்வியாண்டில் மூன்றாண்டு எம்.டி. சித்தா பட்டப் படிப்புக்கு மொத்தம் 94 இடங்கள் உள்ளன.
இப்படிப்புக்கு அகில இந்திய ஆயுஷ் முதுநிலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (ஏஐஐபிஜிஇடி) 2017-இல் தேர்ச்சி பெற்று தகுதி பெற்ற மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அக். 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டன. விண்ணப்பித்தவர்களில் தகுதியான 194 பேரின் தகுதிப்பட்டியல் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...