அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தென்னாப்பிரிக்காவில் 4-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: நவ.16-இல் தொடக்கம்

நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வரும் நவ.16-இல் தொடங்குகிறது. 

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:34 pm

DIN

நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வரும் நவ.16-இல் தொடங்குகிறது. 
இதுகுறித்து நீதிபதி வள்ளிநாயகம், உலகத் தமிழர் பொருளாதார மையத் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், ஏ.அபுபக்கர் ஆகியோர் வெள்ளிக்கிழமை சென்னை செய்தியாளர்களிடம் கூறியது:
டர்பன் நகரில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிப்பதால் அந்த இடத்தில் இதுபோன்ற மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியதாக இருக்கும். இம்மாநாடு உலகெங்கும் உள்ள தமிழர்களின் வணிகம், பொருளாதாரம் குறித்து விவாதிக்கவும், முதலீட்டுக்கான வாய்ப்புகள், தொழில்முறை ஒருங்கிணைப்பு, அறிவுத்திறன்களைப் பகிர்தல் போன்றவை குறித்து கலந்துரையாடுவதற்கும் ஒரு களமாக அமையும். 
யார்-யார் பங்கேற்பு? இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கயானா பிரதமர் வீராசாமி நாகமுத்து, மோரீஷஸ் குடியரசுத் துணைத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கே.பாண்டியராஜன், தொழிலதிபர்கள் நல்லிகுப்புசாமி, ஜெம் வீரமணி, வி.ஜி.பி. சந்தோஷம், பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோரும் கல்வியாளர்கள் ஜி.விசுவநாதன், எஸ்.ஜெகத்ரட்சகன், நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.காந்தி, மோகன் பராசுரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 
சென்னை வளர்ச்சிக் கழகம், உலகத் தமிழர் பொருளாதார மையம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள விழாக்குழு ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்தியா, மலேசியா, துபை, லண்டன், ரஷியா நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். இந்த மாநாட்டின் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீஸ்ரீர்ய்ச்ழ்ங்ய்ஸ்ரீங்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.