தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மெட்ரோ ரயில்: தாமதமாகும் சென்னை மத்திய சதுக்கப் பணிகள்

சென்னை சென்ட்ரல் அருகே இம்மாதம் தொடங்கப்படவிருந்த மத்திய சதுக்கப் பணிகள் தாமதமாகும் என சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :9 செப்டம்பர் 2017, 11:15 pm

சென்னை சென்ட்ரல் அருகே இம்மாதம் தொடங்கப்படவிருந்த மத்திய சதுக்கப் பணிகள் தாமதமாகும் என சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மூன்று புறநகர் ரயில் பாதைகள், ஒரு விரைவு ரயில் பாதை, மற்றும் இப்போது கட்டுமானத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் பாதைகள் ஆகியவை கூடும் இடமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன.
இந்தப் பகுதியில் பயணிகளுக்கான வசதிகள், கீழ் தள வாகன நிறுத்தும் வசதி, பாதசாரிகளுக்கான முறையான நடைபாதை மற்றும் தரை தள வாகன நிறுத்தும் வசதி முதலானவற்றை கொண்ட ஒருங்கிணைந்த பலதரப்பட்ட போக்குவரத்து முறையினை மேம்படுத்துவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நிதி அளிக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் கழகம் மூலம் ரூ.400 கோடி செலவில், ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுமக்கள் கூடம், மத்திய புறநகர் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை ரயில்வே தலைமை அலுவலக கட்டடம், சென்னை மருத்துவ கல்லூரி, அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர், சென்னை பெருந்திரள் திட்ட ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம் மற்றும் ராமசாமி முதலியார் சத்திரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் உலகத் தரத்தில் மத்திய சதுக்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒப்பந்தப் புள்ளி விடுவதில் சில சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதால் இந்தப் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரிப்பன் கட்டடமும் இணையும்: ரூ.400 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுமக்கள் கூடம், புறநகர் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை ரயில்வே தலைமை அலுவலக கட்டடம், சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர், பூங்கா ரயில் நிலையம் மற்றும் ராமசாமி முதலியார் சத்திரம் ஆகியவற்றுக்கு அருகே உள்ள பகுதிகள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு மத்திய சதுக்கமாக அமைக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் பயணிகளுக்கான வசதிகள், கீழ்தளத்தில் வாகன நிறுத்தும் வசதி, பாதசாரிகளுக்கான நடைபாதை மற்றும் தரைத்தள வாகன நிறுத்தும் வசதி ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைந்த பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்.
பிரமாண்ட ரயில் நிலையம்: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் பூமிக்கடியில் இரண்டு அடுக்குகளாக அமைகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் செல்லும் ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்லும் ரயிலும் என இரண்டு அடுக்குகளாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலிருந்து கீழே 10 -ஆவது மீட்டரில் பயணச்சீட்டு நிலையமும், 17 -ஆவது மீட்டரில் முதல் வழித்தடத்துக்கான ரயில் பாதையும், 21 -ஆவது மீட்டரில் இரண்டாவது வழித்தடத்துக்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையம் 388 மீட்டர் நீளமும், 333 மீட்டர் அகலமும் கொண்டு, 70 ஆயிரம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், பூங்கா நகர் மாடி ரயில் நிலையம் மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகிய நான்கு முக்கிய ரயில் நிலையங்களுக்கு இணைப்பு வழி கொடுக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.