சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

லஞ்ச வழக்கு: அரசு அதிகாரியை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

எரிபொருள் நிரப்பும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, சிபிஐ

Updated On :19 ஏப்ரல் 2018, 4:21 am IST

எரிபொருள் நிரப்பும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரியை, சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் எரிபொருள் நிரப்பும் நிறுவனம் தொடங்க அனுமதி கோரியுள்ளார். சென்னையில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறையின் தென்மண்டல அலுவலக இணைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.கே.யாதவ் அனுமதி வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஏ.கே.யாதவ், லஞ்சம் கொடுத்த சக்திவேல், இடைத்தரகராக இருந்த குமரேசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கைதான அதிகாரி ஏ.கே.யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.20) காலை 11 மணி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.