மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து...

News image

முற்றுகையிட சென்ற விவசாயிகள். - படம் - தினமணி

Updated On :31 மே 2026, 12:47 pm IST

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற 500-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கர்நாடக எல்லையில் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக்கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சாவூரில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஓசூர் வந்தடைந்தனர்.

ஓசூரில் இருந்து கர்நாடகத்தை நோக்கி பேரணியாக சென்ற அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இஎஸ்ஐ மருத்துவமனை உள் வட்டச் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பினர் இன்று (மே 31) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் களத்தில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கியக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

பச்சைத் துண்டு அணிந்து போராட்டம்: போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகள் தங்களின் அடையாளமான பச்சைத் துண்டுகளை அணிந்து, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயப் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: "மழைப்பொழிவு இல்லாததாலும், போதிய நீர்வரத்து கிடைக்காததாலும் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு தீவிரமாக்கப்படும்.

​அரசின் தரப்பிலிருந்து உரியப் பேச்சுவார்த்தை நடத்தி, சாதகமான முடிவு அறிவிக்கப்படும் வரை தங்களது அறவழிப் போராட்டம் தொடரும்” என்று விவசாயிகள் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

More than 500 farmers who went to lay siege to the Mekedatu area were stopped at the Karnataka border on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.