8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மீத்தேன் திட்ட எதிர்ப்பு: போராட்டக் குழு உறுப்பினருக்கு முன் ஜாமீன்

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடியவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடியவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜபாண்டியன் தாக்கல் செய்த மனுவில், நான் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தைச் சேர்ந்தவன். மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தொடந்து போராடி வருவதுடன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளேன். கடந்த ஜூலை 5-ஆம் தேதி அடியக்கமங்கலம் அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் மீத்தேன் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாயில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவாரூர் டவுன் போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த தீ விபத்து சம்பவம் நடந்தபோது நான் திருச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ராஜபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.